;
Athirady Tamil News

பாபாவங்காவின் தீர்க்கதரிசனம் : நெருங்கும் மூன்றாம் உலகப்போர் : பீதியை கிளப்பும் நகர்வுகள்

0

சிரியாவின்(syria) வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என பார்வையிழந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா(baba vanga) கணித்துள்ளமை இன்று உண்மையாக நடந்துவிடுமோ என்ற வகையிலான அச்சப்படும் சம்பவங்கள் மிக விரைவாகவே நடந்தேறி வருகின்றன.

அந்த வகையில் சிரிய நாட்டு கிளர்ச்சியாளர்கள், அந் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றியுள்ள செய்தி வெளியாகி உள்ளது. அவர்களின் முன்னகர்வை தடுத்து நிறுத்த ரஸ்யா வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளபோதிலும் அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை நோக்கிமுன்னேறி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சிரியாவின் வீழ்ச்சியை அடுத்து ஆரம்பமாகும் போர்

எனவே இவ்வாறான தகவல்கள் பாபா வங்காவின் கணிப்பு தொடங்கும் காலம் என கருதப்படுகிறது. சிரியா வீழ்ந்ததும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் தொடங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் தொடங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும் என்று தெரிவித்துள்ளார் பாபாவங்கா.

பாபாவங்காவின் கணிப்பின்படியான நகர்வுகள்
அதேபோல, சிரியா வெற்றிபெற்றவரின் காலில் விழும், ஆனால், வெற்றி பெற்றவர் அவராக இருக்கமாட்டார் என்றும் கூறியுள்ளார் பாபா. அதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் பாபாவங்காவின் கணிப்பின்படியான நகர்வுகள் மட்டும் ஆரம்பமாகியுள்ளன என்பது மட்டும் நிதர்சனம் என்கின்றனர் அவரது கணிப்பை பின்பற்றுவோர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.