உக்ரைனில் ராணுவ படைகளை களமிறக்க பிரித்தானியா-பிரான்ஸ் ரகசிய பேச்சுவார்த்தை
உக்ரைனில் இராணுவ படைகளை களமிறக்க பிரித்தானியா-பிரான்ஸ் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்து பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Radio Free Europe/Radio Liberty-ல் பெயர் குறிப்பிட விரும்பாத NATO உயர் அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்பு பாதையில் ஒரு ஆங்கிலோ-பிரெஞ்சு படைப்பிரிவு ரோந்து செல்லும் சாத்தியக்கூறு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்பதை உறுதிப்படுத்த அத்தகைய நடவடிக்கை தேவை என்று ரேடியோ லிபர்ட்டி வட்டாரம் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Jean-Noel Barrot துருப்புக்களை அனுப்புவது பற்றி பாரிஸ் “எந்த விருப்பத்தையும் நிராகரிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
முன்னாள் பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் கடந்த வாரம் ஒரு ஐரோப்பிய படை ரஷ்யாவுடனான எல்லையை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த முயற்சியின் மூலம் உக்ரைனின் நிலப்பரப்பில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அஸ்திவாரம் அமைக்க, ஐரோப்பிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்க முயல்கின்றன.