;
Athirady Tamil News

ரஷ்ய ஜனாதிபதிக்கான விமானத்தில் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரைன் சிறார்கள்

0

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து சிறார்கள் கடத்தப்பட்டு, அவர்களின் உக்ரேனிய அடையாளங்கள் களையப்பட்டு ரஷ்ய குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேனிய சிறார்கள்

ரஷ்ய ஜனாதிபதியின் விமானங்கள் மற்றும் நிதியுதவியால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

உக்ரைனில் போரின் ஆரம்ப மாதங்களில் 314 உக்ரேனிய சிறார்கள் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கலின் அடிப்படையில் மார்ச் 2023ல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது சிறார் உரிமைகள் ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைதாணை பிறப்பித்தது.

ஆனால், இராணுவ நடவடிக்கை நடைபெறும் பகுதியில் குழந்தைகளைப் பாதுகாக்க மனிதாபிமான அடிப்படையில் தனது ஆணையம் செயல்பட்டதாக எல்வோவா-பெலோவா விளக்கமளித்திருந்தார்.

சட்டத்திற்கு புறம்பாக

இந்த நிலையில், ஆய்வில் உறுதி செய்யப்பட்ட தகவல்களை புதன்கிழமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வாளர் நதானியேல் ரேமண்ட் தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய சிறுவர்களை கடத்தி அவர்களை ரஷ்ய மக்களாக மாற்றும் திட்டம் இதுவென்றும் ரேமண்ட் தெரிவித்துள்ளார். கட்டாய இடமாற்றம் என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். சட்டத்திற்கு புறம்பாக உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக புடின் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

படையெடுப்பிற்குப் பிறகு சுமார் 19,500 சிறார்கள் ரஷ்யா அல்லது ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் மதிப்பிடுகிறது. உக்ரைனின் இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளதுடன், உரிய ஆதாரம் அளிக்குமாறு எல்வோவா-பெலோவா கோரிக்கை வைத்துள்ளார்.

வெளியான தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 2022ல் படையெடுப்பிற்கு முந்தைய நாட்களில் ரஷ்யா ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களிலிருந்து உக்ரேனிய குழந்தைகளை அழைத்துச் செல்லத் தொடங்கியது என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.