உக்ரைன் விவகாரம்… ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கும் நேட்டோ நாடுகள்
உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்க புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் பல நேட்டோ உறுப்பினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமெரிக்க நிர்வாகம்
லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் செவ்வாயன்று தெரிவிக்கையில், அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கூட்டமைப்பில் சேருவதற்கான அழைப்பிற்கான உக்ரைனின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவெடுத்துள்ளதாகவும், ஆனால் புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் நேட்டோ வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் உக்ரைனுக்கான அழைப்பிதழை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் சில உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அமெரிக்காவில் புதிய நிர்வாகம் அமைவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததும் ஒரே நாளில் உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவருவதாக ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால் உக்ரைன் கொள்கைக்கான அவர்களது குழுவின் திட்டங்கள் தெளிவாக இல்லை என்றே கூறப்படுகிறது.
ஒருமித்த கருத்து
கொள்கையளவில், உக்ரைன் உறுப்பினராக இருக்கும் என்பதை அரசியல் தலைவர்களாகிய நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் பைபா பிரேஸ் கூறியுள்ளார்.
மேலும், உறுப்பு நாடுகள் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும். தற்போது அனைவரும் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.