இலங்கையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு
ஃபெங்கல் புயலின் தாக்கத்தினால், நாட்டில் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மீன்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் ஃபெங்கல் புயலின் தாக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது மீன்பிடி நடவடிக்கைகளையும் பாதித்தது.
இதன்படி, பேலியகொட மத்திய மீன் சந்தையில், தலபத் மீனின் மொத்த விலை 2400-2500 ரூபாவாகவும், பாரை மீன் 1400 ரூபாவாகவும், லின்னா மீன் 1000-1100 ரூபாவாகவும், சாளை மீன் 450-500 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது.
அத்துடன், கெலவல்லா மீனின் மொத்த விலை 1400 ரூபாவாகவும், சூரை மீன் 650 ரூபாவாகவும், இறால் 1200-1600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மீன்களின் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடித் தொழில் குறைவினால், மொத்த சந்தைக்கு நாள்தோறும் வரும் சில்லறை வியாபாரிகளின் எண்ணிக்கையும் 50 வீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், அதிக விலைக்கு மீன்களை வாங்கி விற்க முடியாத நிலை இருப்பதாகச் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மீன் விற்பனை குறைந்துள்ளதால், மீன் வியாபாரிகள் மட்டுமின்றி, சந்தையை ஒட்டி வாழ்வாதாரமாக இருக்கும் பல தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.