முதன்முறையாக கவிழ்ந்த பிரான்ஸ் அரசாங்கம்
பிரான்ஸ் (France) பிரதமர் மிஷெல் பார்னியேருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும் இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2025 ஆம் ஆண்டிற்கான பிரதமர் மிஷெல் பார்னியேரின் முன்மொழியப்பட்ட சமூகப் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையிலேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணை
ஆனால் 50 பில்லியன் பவுண்டுகளை மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தமது பட்ஜெட் என்று பார்னியேர் தெரிவித்திருந்தார் அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனாதிபதி ஆணை மூலம் பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பார்னியேர் உறுதியாக தெரிவித்திருந்ததே, எதிர்க்கட்சிகளை கோபம் கொள்ள வைத்துள்ளது.
சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் மேக்ரான் நிர்வாகத்தின் கீழ் இப்படியான நடவடிக்கைகள் சாதாரணம் என்றே கூறுகின்றனர் அத்தோடு பிரதமர் மிஷெல் பார்னியேர் தற்போது பிரான்சின் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் என்றே அறியப்பட உள்ளார்.
தேர்தல் விவகாரம்
பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்துள்ளது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது அத்தோடு தற்போது மேக்ரான் புதிய பிரதமரை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தேர்தல் விவகாரத்தில் ஜேர்மனியும் பரிதாபமான நிலையில் தள்ளப்பட்டிருக்க, தற்போது பிரான்சின் அரசியல் சூழல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, அமெரிக்காவில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஐரோப்பிய வல்லரசு நாடுகள் பின்னடைவை சந்தித்து வருவது கவனம் பெறுள்ளது.
மேலும், பிரான்சில் புதிதாக தெரிவாகும் பிரதமரும் தற்போதைய அதே நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் அத்தோடு ஜூலை மாதத்திற்கு முன்னர் புதிதாக நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் முன்னெடுக்க முடியாத சூழலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.