தினமும் வெந்நீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா?
நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று. நெய் பழங்காலம் தொட்டு முன்னோர்கள் முதல் தற்போது உள்ளவர்கள் வரை உட்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இது தவிர இந்த நெய்யில் இன்னும் பல சத்துக்கள் உள்ளது. எனவே இத்தனை சத்துக்கள் நிறைந்த நெய்யை தினமும் காலையில் சுடு நீரில் கலந்து குடித்தால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சூடான நீரில் நெய் கலந்து குடித்தலின் நன்மைகள்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் டீ, காபியை தவிர்த்து சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் இருந்த இடமே தெரியாமல் போய் விடும்.
நாம் பல உணவுகளை உண்கிறோம். இதில் தற்போது துரித உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகின்றோம். இதில் அதிகளவான நச்சுத்தன்மை காணப்படுகின்றன.
நெய்யில் அதிகளவான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றி குடலையும் உடலையும் சுத்தமாக வைத்திருக்கும். நெய்யில் கெட்ட கொழுப்புக்கள் இல்லை.
இதில் நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளது. எனவே இதை நாம் சாப்பிட்டாலோ குடித்தாலோ உடல் எடை என்பது அதிகரிக்காது. நினைவாற்றல் குறைவாக இருப்பவர்கள் நெய் சாப்பிடுவது நல்லது.
நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்கள் அண்டாமல் செய்யும். சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் நெய் சாப்பிடுவது சிறந்த தீர்வு.
இதற்கு காரணம் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற காரணிகள் தான். இது தவிர இதை அதிகாலையில் வெறுவயிற்றில் குடிப்பது ரத்த ஓட்டத்தை மேன்படச்செய்து அன்றைய நாள் முழுக்க உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும் என ஆய்வுகள் மூலம் கூறப்பட்டுள்ளது. எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் நெய் சாப்பிட்டு வருவது நன்மை தரும்.
இதை எப்படி குடிக்க வேண்டும்
நெய் எப்போதும் பச்சையாக சாப்பிடும் போது உருக்காமல் சாப்பிடக்கூடாது. எனவே ஒரு சிறிய கரண்டியில் கட்டியாக இருக்கும் நெய்யை எடுத்து சூடாக்கி அது உருகி எண்ணெய் பருவத்தில் வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இதை குடித்து முடித்தவுடன் சுமார் 30 நிமிடங்களுக்கு எந்த ஒரு உணவும் சாப்பிட கூடாது. 30 நிமிடங்கள் கழித்த பின்னர் எதுவும் குடிப்பதை தவிர்த்து காலை உணவு உண்பது நன்மை தரும்.