;
Athirady Tamil News

இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதிமொழி!

0

நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

சில இனவாத கருத்துக்களால் அதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையே நேற்று (04-12-2024) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், எஸ்.குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.