;
Athirady Tamil News

அநுர அரசாங்கத்திற்கு உலக வங்கியிடமிருந்து கிடைத்துள்ள ஆதரவு

0

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று (04) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் ஒத்துழைப்பு
இதன்போது உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்காலத்திலும் அவ்வண்ணமே முன்னெடுக்கப்படும் என்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் உறுதியளித்தார்.

அரசாங்கத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தி திட்டங்களைச் செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முதற்கட்டமாக, இந்நாட்டு ஆலோசனைக் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்துக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள்
இதன்போது தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம், கிராமிய வறுமையை ஒழித்தலுக்கான திட்டங்கள், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்துக்கு இணையான டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நாட்டில் விவசாயம், மீன்பிடித்துறை, சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.