ஆசிய நாடொன்றிற்கு பயணத்தை தவிர்க்க பிரித்தானியா எச்சரிக்கை
ஆசிய நாடொன்றிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு பிரித்தானியா அதன் குடிமக்களை எச்சரித்துள்ளது.
வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, அந்நாட்டிற்கு பயணிக்க பிரித்தானியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானிய அரசு வெளியிட்ட புதிய அறிவுறுத்தலின் படி, வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
இதன் காரணமாக வெளிநாட்டினரால் அதிகம் செல்லப்படும் பிரதேசங்கள், மக்கள் கூட்டம் காணப்படும் இடங்கள், மத கட்டடங்கள் மற்றும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிக பொலிஸ் பாதுகாப்பு உள்ள இடங்கள் மற்றும் பாரிய கூட்டங்கள் போன்றவற்றை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது, நவம்பர் 25-ஆம் திகதி வெளியேற்றப்பட்ட இஸ்கான் துறவி சின்மோய் கிருஷ்ணா தாஸ் பிரம்மச்சாரி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட வன்முறை காரணமாக வெளியானது.
அதேபோல், பிரித்தானிய அரசு, இஸ்லாமுக்கு எதிரான கருத்துகள் அல்லது வாழ்க்கைமுறைகளைக் கொண்டிருப்பவர்களை சில குழுக்கள் இலக்கு வைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
வங்கதேசத்தில், சிறுபான்மையினர், குறிப்பாக இந்து சமூகத்தினர் மீது தாக்குதல்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதில் வெடிபொருள் (IED) தாக்குதல்களும் அடங்கும்.
வங்கதேச அதிகாரிகள், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.