பிரித்தானியரால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: தாய்லாந்தில் அதிரடி கைது
தாய்லாந்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர் கைது செய்யப்பட்டார்.
பட்டாயாவில் கைது
West Yorkshireயின் லீட்ஸ் நகரைச் சேர்ந்தவர் 30 வயதான லூக் ஆடம் லாரன்ஸ்.
இவர் தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் ஒரு ரிசார்ட்டில் தனது காதலியுடன் இருந்தபோது பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
லாரன்ஸ் 6 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததால் அவர் மீது பலாத்காரம், மிரட்டல், வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தாய்லாந்தின் மத்திய புலனாய்வு பணியகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், சந்தேக நபர் இங்கிலாந்தில் உள்ள NCAஆல் பாதிப்பிற்குள்ளான சிறுமி குறித்து அடையாளம் காணப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
அதிகாரிகள் தகவல்
லாரன்ஸின் போனில் சிறுவர் துஷ்பிரயோக உள்ளடக்கம் கண்டறியப்பட்டதாக NCA கூறியபோது, விசாரணை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கைக்கு பின்னர் சிறுமியின் தாயாருக்கு விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் ஆதாரங்களை சமர்பித்ததாகவும், குற்றப்பத்திரிகையில் சேர்க்க மேலும் புகார்களை அவர் தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.