;
Athirady Tamil News

இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது; இலங்கையில் கண்ணீரை வரவழைத்த சம்பவம்

0

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தாயின் சடலத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் எவரும் முன்வராத துயர சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்தேறியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த தாயின் உடலை , ஹொரவபொத்தானை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, ஹொரவபொத்தானை பொது மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அநாதரவாக விட்டுச்சென்ற பிள்ளைகள்
இறந்த இந்த தாய் பல மாதங்கள் சிகிச்சைக்காக ஹொரவபொத்தானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த தாயாருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தும், நோய்வாய்ப்பட்ட தாயை பார்க்க யாரும் வரவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த தாயார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் தாயின் சடலைத்தி கூட பிள்ளைகள் யாரும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது உடல் அரச செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹொரவபொத்தானை லேவசபிரி ஏரி கிராமத்தில் வசித்து வந்த இந்த தாய் இறந்துவிட்டதாக பிள்ளைகளுக்கு தெரிவிக்கப்பட்டதும் ஒரு பிள்ளை வந்து தாயாரை வந்து பார்த்ததாகவும், எனினும் பின்னை சொல்லாமல்கொள்லாமல் மருத்துமனையை விட்டு வெளியேறியதாகவு கூறப்படுகின்றது.

அதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இந்த தாய்க்கு மிகுந்த அன்பையும் அக்கறையையும் அவர் இறக்கும் வரை அளித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் ஐவர் இருந்தும் தாயின் மரணத்தில் கூட அவர்கள் பங்கெடுக்காத சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.