;
Athirady Tamil News

வவுனியாவில் திடீரென மாறிய காலநிலை!

0

வவுனியாவில் , நேற்று மாலை கடும் மழை பொழிந்ததன் பின் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டமையினால் வாகன சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனி மூட்டத்தால் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட சாரதிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதோடு மின் குமிழ்களை ஒளிர விட்டு வாகனங்களில் பயணித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதேஎசமயம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.