இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதே டொனால்ட் லுவின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டிசம்பர் 10ஆம் திகதி வரை இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிராந்திய செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தெற்காசியாவின் முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.