லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை
லெபனான் – இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை (04) மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான ஈ.கே – 648 மூலம் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் 05 பிள்ளைகளும் 03 பெண்களும் 19 ஆண்களும் காணப்படுகின்றனர். அதேவேளை இதுவரை லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த சுமார் 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து அவர்களை நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.