போர் வந்தால் பிரித்தானியாவால் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்கமுடியாது: அமைச்சர் கூறும் அதிர்ச்சித் தகவல்
போர் வந்தால், பிரித்தானிய படைகளால் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்கமுடியாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய அமைச்சர் ஒருவர்.
போர் வந்தால் பிரித்தானியாவால் தாக்குப்பிடிக்கமுடியாது
ரஷ்ய உக்ரைன் போரில், நாளொன்றிற்கு கொல்லப்படும் மற்றும் உயிரிழக்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 1,500.
பிரித்தானிய ராணுவத்திலிருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, 2024 ஜூலை நிலவரப்படி 136,525 என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, உக்ரைன் சூழ்லை ஒப்பிடும்போது, பெரிய அளவில் போர் வெடிக்குமானால், பிரித்தானிய ராணுவத்தால் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை கூட தாக்குப்பிடிக்க முடியாது என்கிறார் பிரித்தானிய பாதுகாப்புத்துறையில் அமைச்சராக உள்ள Al Carns என்பவர்.
எனவே, பிரித்தானியா தனது ராணுவத்தை வலுப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
முழுநேர கடற்படை தளபதியாக இருந்த Al Carns, இந்த ஆண்டு அரசியலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.