;
Athirady Tamil News

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண்

0

அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு
போகஹவாவ பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.