தென்னிலங்கையை உலுக்கிய சம்பவம் – கழிவறைக்குள் சிக்கிய சிறுமியின் சடலம்
கம்பஹாவில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி முதல் 14 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கழிவறை குழியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம்
இந்தக் கொலையில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முறைப்பாடு செய்த பெண்ணின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவறையில் சடலத்தை வைத்து கான்கிரீட்டால் மூடியிருப்பதாக, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.