இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
துளை – கொழும்பு வீதியில் களுபஹன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்றார்.
இதன் போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.