;
Athirady Tamil News

மதுபான அனுமதி கட்டண அதிகரிப்புக்கு தடை!

0

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 ஊடாக மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்தக் கட்டணத்தை ரூபா 20 மில்லியனாக உயர்த்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வருடாந்த அனுமதிப்பத்திர கட்டண உயர்வினால் தமக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரர்கள் இந்த மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனுமதிப்பத்திர கட்டணத்தை அறவிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.