52 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் ஹிஸ்புல்லா : மீண்டு வரும் லெபனான்
லெபனானில் (Lebanon) இஸ்ரேலுடனான (Israel) 14 மாத கால போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டொலருக்கு மேல் ரொக்கமாக ஹிஸ்புல்லா (Hezbollah) விநியோகித்துள்ளதாக அவ்வமைப்பின் தற்போதைய தலைவர் நைம் காசிம் (Naim Qassem) தெரிவித்துள்ளார்.
ஒரு நபருக்கு $300 (25 ஆயிரம் ரூபாய்) முதல் $400 (33 ஆயிரம் ரூபாய்) வரையிலான வீதத்திலும் 233,500 பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு $77 மில்லியனுக்கும் (சுமார் 51 கோடியே 98 லட்சம் ரூபாய்) அதிகமான தொகை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் பெய்ரூட்டில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வாடகையாக $6,000 டொலரும், தலைநகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு $4,000, டொலரும் வீடுகளை இழந்தவர்களுக்கு $8,000 டொலர் வீதம் ஹிஸ்புல்லா ஒதுக்கியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பண ஆதாரமாக இருக்கும் ஈரான் உதவியுடன் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
காசாவுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3500க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்தனர்.
அரசியல் சக்தி
கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இணைந்து ஏற்படுத்திய போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும் முந்தைய தாக்குதல்கள் லெபனான் முழுவதும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது.
ஐநா மற்றும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி , 14 மாத கால சண்டையில் லெபனானில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மேலும் 3.2 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழு என்பதையும் தாண்டி ஹிஸ்புல்லா லெபனானில் குறிப்பிடத்தகுந்த அரசியல் சக்தியாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.