என் சகோதரர் ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை: பிரியங்கா காந்தி பேச்சு
என் சகோதரர் ராகுல் காந்தியை பற்றி நான் பெரும்படுகிறேன் என்று வயநாடு எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி பேசியது
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “அதானி விவகாரத்தை பற்றி விவாதம் செய்ய பாஜகவுக்கு தைரியம் இல்லை. ஜனநாயகத்தில் தான் விவாதம் நடத்த வேண்டும். ஆனால், அவர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.
பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தியை துரோகி என்று விமர்சிக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை துரோகி என்று கூறினார்கள். அந்த வரிசையில் ராகுல் காந்தியை சொல்கிறார்கள். இதில் புதிதாக எதுவும் இல்லை.
எனது சகோதரனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை. என் சகோதரர், நாட்டின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டவர்” என்று பதில் அளித்தார்.