பிரதேச செயலக ரீதியாக டெங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசாங்க அதிபர் நடவடிக்கை
தற்போதை மழைக்குப் பின்னரான சூழலில் டெங்குப் பரவலை மிக அதிகமாக காணப்படுவதனால், மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பொருத்தமான பொறிமுறையூடாக நுளம்பு பெருகாது தடுப்பதற்கேதுவாக, காணிகளில் காணப்படும் வெற்றுக்கலன்களை சேகரித்து உரிய வகையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சகல பிரதேச செயலாளர்களையும் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 2024.12.10 ஆம் திகதி முதல் 2024.12.13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இச் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்ற அறிக்கையினை 2024.12.16 ஆம் திகதி அனுப்பி வைக்குமாறும் பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.