;
Athirady Tamil News

மாவீரர் வாரம் – யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை

0

யாழ்ப்பாணத்தில் . மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வார கால பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் நேற்றைய தினம் இரு இளைஞர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் தொடர்பில் முகநூலில் பதிவிட்டமை தொடர்பில் கடந்த 29ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

அதேவேளை வல்வெட்டித்துறை பகுதியில் புலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடியமை தொடர்பில் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 06 பேரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்

அத்துடன் மாவீரர் நாள் மற்றும் புலிகளின் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து முகநூலில் பதிவிட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 06க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.