இலங்கையில் தொடங்கியது தேங்காய் வரிசை!
இலங்கையில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேங்காய் விலையானது 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய” கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தது.
அதேவேளை கடந்த காலங்களில் எரிபொருளுக்கு தான் மக்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.