சிரியாவிலிருந்து வெளியேறுங்கள் : இந்தியர்களுக்கு அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
அமெரிக்கா (United States) ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் (syria) அரசுக்கு எதிரான கலகத்தை தீவிரப்படுத்தியுள்ளதால் அங்கிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் இங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய அதிபர் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு பெற்றவர்.
எனவே இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சியை தங்கள் ஆதரவுடன் அமைக்க வேண்டும் அமெரிக்காவும், இஸ்ரேலும் முயன்று வருகின்றது.
கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் முக்கிய நகரங்களான டமாஸ்கஸ் உள்ளிட்டவை சிரிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தாக்குதல்களினால் மூன்றாவது பெரிய நகரமான டமாஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து கிளர்ச்சியாளர்கள் கவலைக்கொள்ளவில்லை. அவர்கள் இதை ‘இணை சேதம்’ (Collateral Damage) என்று குறிப்பிடுகின்றனர்.
மத்திய அரசு
இந்நிலையில் சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக கிடைக்கும் விமானங்களை பிடித்து நாடு வந்து சேருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மீட்பு குறித்த உதவிக்கு +963993385973 என்கிற எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்றும், [email protected] எனும் மின்னஞ்சல் (Email) முகவரியை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 2.8 லட்சம் சிரிய மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 25 லட்சமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.