;
Athirady Tamil News

அவசரமாக பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்: பின்னணி

0

பிரித்தானிய அரசின் கோரிக்கையை ஏற்று, அவசரமாக பிரான்ஸ் செல்கிறார் இளவரசர் வில்லியம்.

எதற்காக இந்த பிரான்ஸ் பயணம்?
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட அந்த தேவாலயம் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்ரிடாம் தேவாலயத்தைத் திறந்துவைக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் முதலான பல பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் சார்பில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்ககாத்தான் இளவரசர் வில்லியம் பிரான்ஸ் செல்கிறார்.

கென்சிங்டன் அரண்மனை செய்தித்தொடர்பாளர் இந்த விடயம் குறித்து கூறும்போது, இளவரசர் வில்லியம், 7.12.2024 அன்று, நாட்ரிடாம் தேவாலயம் மீண்டும் திறக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார்.

பிரித்தானியாவின் சார்பில் தேவாலய திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மன்னருடைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இளவரசர் வில்லியம் பிரான்ஸ் பயணிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.