;
Athirady Tamil News

திடீரென அமெரிக்க ராணுவத் தலைவரை அழைத்த ரஷ்ய ராணுவ தலைவர்: ஒரு அசாதாரண தொலைபேசி உரையாடல்

0

மூன்றாம் உலகப்போர் எப்போது வெடிக்குமோ என உலகம் அச்சத்திலிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக, ரஷ்ய, அமெரிக்க ராணுவத் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்ட ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

ஒரு அசாதாரண தொலைபேசி உரையாடல்
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு அமெரிக்கா முதலான நாடுகள் ஆதரவளித்துவருகின்றன.

குறிப்பாக, அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக்கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்க அமெரிக்கா அனுமதியளித்தது.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைனிலுள்ள Dnipro என்னும் நகரின்மீது Oreshnik என்னும் பயங்கர ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா தனது ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவைத் தாக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்தே ரஷ்யா Oreshnik ஏவுகணையைப் பயன்படுத்தியதாக செய்திகள் பரவ, பதற்றம் அதிகரித்தது.

இப்படிப்பட்ட ஒரு பதற்றமான ஒரு சூழலில், யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய விடயம் நிகழ்ந்துள்ளது.

ஆம், ரஷ்ய ஜெனரலான Valery Gerasimov, அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுடைய மூத்த ராணுவ ஆலோசகரான ஜெனரல் Charles Brownஐ தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

அதுவும், குறிப்பாக, Oreshnik ஏவுகணை தொடர்பில் ஒரு முக்கிய விடயம் குறித்து பேசியுள்ளார் Gerasimov.

அதாவது, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் மோதல் சூழலை தணிப்பது தொடர்பாக இருவரும் பேசியுள்ளதுடன், ரஷ்யா Oreshnik ஏவுகணையை வீசியதற்கும், அமெரிக்கா அளித்த ஏவுகணையைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவுக்குள் தாக்கியதற்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் Gerasimov.

புடின் Oreshnik ஏவுகணை தொடர்பில் மிரட்டல் விடுத்ததற்கு மாறாக, அந்த ஏவுகணை வீசும் விடயம், அமெரிக்கா தனது ஏவுகணையைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்க உக்ரைனுக்கு அனுமதியளிக்கும் முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார் Gerasimov.

ஆக, இந்த முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி அழைப்பு, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இருக்கக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.