ஆப்பிரிக்க நாடொன்றில் 26 உயிர்களை பலிவாங்கிய கோர விபத்து
ஐவரி கோஸ்ட் நாட்டில் சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
சிறிய ரக பேருந்துகள் மோதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் உள்ள Brokoua என்ற கிராமத்தில், இரண்டு சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.
இதனால் பேருந்துகள் தீப்பற்றி எரிந்தன. இதில் சிக்கிக்கொண்ட 26 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
போக்குவரத்து அமைச்சகம் விபத்து குறித்த விவரங்களை வெளியிட்டது. அத்துடன் இந்த பேரழிவு நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணங்களை கண்டறிய விசாரணையை தொடங்குவதாகும் உறுதிப்படுத்தியது.
10 பேர் தீயில் கருகி மரணம்
அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி இறந்த 26 பேரில் 10 பேர் தீயில் கருகி பலியாகினர்.
ஐவரி கோஸ்டில் மோசமான சாலை உள்கட்டமைப்பு, பரவலான கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 1,000 பேர் இறப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.