வழவழப்பான வெண்டக்காயில் இருக்கும் 3 அதிசய பலன்கள்! யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?
வெண்டக்காய் ஒரு வழவழப்பான காண்கறிகறி வகையாகும். இது வழவழப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.
இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டக்காய் சாப்பிடுவதால் அறிவு வளர்ச்சி கிடைக்கும். இது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
வழவழப்பான இந்த காய்கறியை முறையாக சமைத்தால் உடலுக்கு தேவையான பல சத்துக்களை பெற முடியும். இதை சிரமப்பட்டு அதிக விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
சந்தைகளில் மலிவு விற்பனைக்கே கிடைிக்ககூடியது தான் வெண்டக்காய்.இதை பச்சையாகவும் சாப்பிடலாம் சமைத்தும் சாப்பிலாம். இந்த பதிவில் வெண்டக்காயில் இருக்கும் சத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
வெண்டக்காய் மருத்துவ பலன்கள்
வெண்டக்காய் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாக கிடைக்கும். அதில் இருக்கும் வைட்டமின் சி எலும்பு வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படுகிறது. உடலில் ரத்த உறைதலுக்கு தேவையான வைட்டமின்கள் வெண்டக்காயில் அதிகம் உள்ளது.
இதில் இருக்கும் பாலிபினால்கள் மாதிரியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன. இவை வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் குணம் கொண்டவையாக காணப்படுகின்றது.
இதில் இருக்கும் வழவழப்புத்தன்மையில் மருத்துவ குணம் உள்ளது. இது நம் உடலில் இரத்த அளவை அதிகரிக்க உதவும். இது நீர்ச்சத்து அதிகம் கொண்டது. இதன் காரணத்தால் தொண்டை புண், செரிமான பிரச்சினைகளை நீக்க உதவி செய்கிறது.
இரத்த சக்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் இந்த வெண்டக்காயை உட்கொள்ளலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் தாக்கத்தை முன்கூட்டியே குறைக்க உதவும். இதயத்தின் இயக்கம் நன்றாக அமைய வெண்டக்காயை தினமும் சாப்பிட வேண்டும்.
இது உடலில் உள்ள செரிமான மண்டலத்தில் படிந்துள்ள கொலஸ்ட்ராலுடன் இணைந்து, அங்கிருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த காயை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.