இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது
வடக்கு மாகாணத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் (மன்னார்), துனுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு) ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 2,100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன.
நேற்று(7) நடைபெற்ற இந்நிகழ்வில் யாழிற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் “Neighborhood First” என்ற கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.