யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பார்வதி பரமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிசேக “பரமேஸ்வரம்” மலர் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பார்வதி பரமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிசேக “பரமேஸ்வரம்” மலர் வெளியீட்டு விழா 06.12.2024 வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வரவேற்புரையை பேராசிரியர் பூ.ஐங்கரன் நிகழ்த்தினார், ஆசியுரையை இந்துக் கற்கைகள் பீடாதிபதி பிரம்ம ஸ்ரீ ச.பத்மநாப சர்மா வழங்கினார். தொடர்ந்து வாழ்த்துரையை கலாநிதி ஆறு. திருமுருகன் நிகழ்த்தினார்.
பரமேஸ்வரம் மலரை துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா வெளியிட்டு வைத்தார், நயப்புரையை வலம்புரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் நிகழ்த்தினார்.
ஏற்புரையை தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன் ஆற்ற, நன்றியுரையை கணக்கீட்டுத்துறைத் தலைவர் ச.பாலபுத்திரன் ஆற்றினார்.
தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.