ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
சிரியா (Syria) தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் கட்டிடத்திற்குள் ஆயுத படைகள் உள் நுழைந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் “பல ஊடகங்களின்” அறிக்கைகளை மேற்கோள் காட்டி குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
மேலும் தூதரகத்திற்குள் உள்ள அறைகள் அடித்து நொறுக்கப்பட்ட காட்சிகளும், ஈரானின் காசிம் சுலைமானி மற்றும் ஹிஸ்புல்லாவின் (Hezbollah) ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) போன்ற படுகொலை செய்யப்பட்ட தலைவர்களின் புகைப்படங்களும் கிழிக்கப்பட்டுள்ளன எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிரியா ஜனாதிபதி பஷார் ஆசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குழு அறிவித்தது.
இதுதொடர்பான காணொளியை சிரியாவின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. டமாஸ்கசை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் பேசிய நபர், சுதந்திர சிரிய அரசாங்கத்தின் அரசு நிறுவனங்களை பாதுகாக்கும்படி அனைத்து போராளிகள் குழு மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.