சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்
சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) விமானம் மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.
டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
அவர் ரஷ்யா அல்லது ஜோர்டான் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்
அதேநேரம் அவர் பயணித்த விமானம் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
விமானங்களின் தரவுகளின்படி, வடக்கு நோக்கி திரும்புவதற்கு முன்பாக அந்த விமானம் தொடக்கத்தில் கிழக்கு நோக்கிப் பறந்தது. சிறிது நேரத்தில் ஹோம்ஸ்க்கு மேலே வட்டமிடும் போது அந்த விமானத்தின் சமிக்ஞைகள் காணாமல் போயின என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசாத்தின் விமானம் காணாமல் போனது குறித்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம்வரத்தொடங்கியுள்ளன.
உறுதிப்படுத்தப்படாத காணொளிகள்
விமானம் சென்ற பாதை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என பல ஊகங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அதேபோல் விமானம் தீப்பிடிப்பது போன்ற, விபத்துக்குள்ளானது போன்ற உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் வலம் வரத்தொடங்கியுள்ளன.