;
Athirady Tamil News

மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்

0

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும்.

புதிய இயந்திரம்
ஜப்பானின் Science Co, நிறுவனம் உருவாக்கிய இந்த இயந்திரம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் அமர்ந்தவுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அவர்களின் தோல் மற்றும் உடலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தண்ணீரின் வெப்பநிலையும், சுத்தப்படுத்தும் முறைகளையும் சரிசெய்யும்.

1970 ஆம் ஆண்டில் ஜப்பானின் World Sanyo Electric Co, நிறுவனம் தற்போது Panansonic என பிரபலமாக அறியப்படுவதுடன் உருவாக்கிய பழைய வடிவமைப்பின் மேம்பட்ட பதிப்பாக இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.