;
Athirady Tamil News

தப்பியோடிய சிரிய ஜனாதிபதிக்கு அரசியல் புகலிடம் அளித்தது ரஷ்யா

0

புதிய இணைப்பு
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி அசாத்துக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய தலைவர் மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பு பெற்றதாக ரஷ்ய அரசு ஊடகமான TASS செய்தி சேவை தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் மொஸ்கோவில் இருப்பதாக கிரெம்ளினில் உள்ள ஆதாரத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

ரஷ்யாவின் TASS செய்தி சேவை, அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், மொஸ்கோவிற்கு வந்த பிறகு, மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யாவால் தஞ்சம் அளிக்கப்பட்டதாக கூறியது.

சிரியாவின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஐ.நா.வின் கீழ் நடைபெற வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாகவும் TASS தெரிவித்துள்ளது.

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி :ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு

அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு சிரிய(syria) ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறினார் என்று ரஷ்ய(russia) வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “ஜனாதிபதி பஷார் ஆசாத்(Bashar al-Assad’) மற்றும் சிரிய அரபு குடியரசு பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டுவந்த குழுக்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தனது ஜனாதிபதி பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் முடிவினை எடுத்தார்.

அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கான உத்தரவு
அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா பங்கேற்கவில்லை, சிரியாவில் உள்ள ரஷ்ய துருப்புகளும் ரஷ்ய ராணுவ தளங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் உடனடியாக அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு ரஷ்யா தெரிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதி எங்கு சென்றுள்ளார் : கூற மறுக்கும் ரஷ்யா
இதேவேளை சிரிய ஜனாதிபதி எங்கு சென்றுள்ளார் என்ற விபரம் எதனையும் ரஷ்யா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிரிய ஜனாதிபதி ஆசாத் நாட்டைவிட்டு வெளியேற பயன்படுத்திய விமானம் சுட்டு விழ்த்தப்பட்டிருக்கலாம் அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற ஊகங்கள் வேகமாக பரவி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.