அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான தகவல்
அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump) கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அமெரிக்க பொருட்கள்
இந்த அறிவிப்பை தொடர்ந்து கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தங்களது தீர்மானங்களில் மாற்றம் செய்ய நேரிடும் என கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய கனடியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.