ரஷ்யாவுடன் போருக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்., ஆயுதங்களுக்கு 100 பில்லியன் யூரோ ஒதுக்க திட்டம்
ரஷ்யா உடனான போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) எதிர்காலத்தில் பாதுகாப்பு செலவுகளை பெரிதும் அதிகரிக்க திட்டமிடுகிறது.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆணையர் ஆந்த்ரியஸ் குபிலியஸ் (Andrius Kubilius), அடுத்த 7 ஆண்டுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்காக சுமார் 100 பில்லியன் யூரோ ஒதுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
இது தற்போதைக்கு ஒதுக்கப்படும் 10 பில்லியன் யூரோவுடன் ஒப்பிடும் போது 10 மடங்கு பெரிய உயர்வு.
ரஷ்ய தாக்குதலின் எதிரொலி
உக்ரைனில் ரஷ்யா நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதல், ஐரோப்பாவின் முக்கிய அச்சமாக உள்ளதால், பாதுகாப்பு முன்னெடுப்புகள் மற்றும் ஆயுத தயாரிப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என குபிலியஸ் கூறுகிறார்.
இது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஒன்றிணைவது அவசியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
500 பில்லியன் யூரோ தேவை
ஐரோப்பிய பாதுகாப்பு துறையை மேம்படுத்துவதற்கு மிகுந்த பணம் தேவைப்படுகிறது.
500 பில்லியன் யூரோவை அடுத்த பத்தாண்டுகளில் செலவிடும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula Von der Leyen) முன்மொழிந்துள்ளார்.
அதே சமயம், பல்வேறு நாடுகள் கடன் வரம்புகளை தளர்த்தும் உத்தியை ஆராய வேண்டும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்புக்கான செலவுகளை மதிப்பீட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் கோரியுள்ளன.
NATO-EU இணைப்பு
நேட்டோவுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, அதன் திறன் குறைபாடுகளை அடையாளம் காணும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்ற திட்டமிட்டுள்ளது.
இந்த உறவுகள் 49 புதிய படை பிரிவுகள், 1,500 டாங்கிகள், 1,000 துப்பாக்கி ஆயுதங்கள் போன்ற உபகரணங்களை வாங்க வழிவகுக்கும்.
மேலும், குபிலியஸ் தனது பேச்சில், “ஆதிக்க நாடுகள் ஒன்றிணைவதைப் போல நாமும் ஒன்றிணைய வேண்டும்” என்றார். இது ஐரோப்பாவின் பாதுகாப்பு முன்னெடுப்புகளை உறுதியாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.