;
Athirady Tamil News

அசாத்தின் வீழ்ச்சி… கொண்டாடித் தீர்க்கும் மக்கள்: சிறை மீண்ட பிஞ்சு சிறுவன்

0

அசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், சிறைக் கைதிகள் பலர் விடுவிக்கப்படும் கூட்டத்தில் பிஞ்சு சிறுவன் ஒருவன் விடுதலையாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு சிறை ஒன்றை

தாம் உண்மையிலேயே விடுவிக்கப்படுகிறோமா என்ற குழப்பத்தின் முடிவில், கடவுள் மிகப் பெரியவர் என அழுவது தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ரஷ்ய உதவியுடன் அசாத் தப்பியுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்கள் படை டமாஸ்கஸுக்கு அருகில் உள்ள சிறப்பு சிறை ஒன்றைத் தாக்கினர், கதவுகளைத் திறந்து நூற்றுக்கணக்கான பெண் கைதிகளை விடுவித்தனர்.

சித்திரவதை மற்றும் கூட்டு மரணதண்டனைகளுக்குப் பெயர்போன Saydnaya சிறை என்பது அசாத் குடும்பத்தினரின் மிருகத்தனமான ஆட்சியின் அடையாளமாக உள்ளது.

வெளிவரும் தரவுகளின் அடிப்படையில், 2011ல் இருந்து 5,000 முதல் 13,000 கைதிகள் வரையில் அங்கு தூக்கிலிடப்பட்டுள்ளனர். கைதிகள் பல ஆண்டுகளாக மனிதாபிமானமற்ற நிலைமைகளைச் சகித்துக்கொண்டனர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலும் அரசியல் கைதிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், நவம்பர் 27 அன்று இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் மின்னல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளில் சிறுவன் ஒருவனும் விடுவிக்கப்பட்டுள்ளது இதயத்தை உருக்கும் காட்சி என்றே குறிப்பிடுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட நகரம்
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை பேருந்துகளில் தங்கள் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அசாத்தின் 24 ஆண்டு கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையிலேயே சிறைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் வேகத்தில் நடந்த தாக்குதல், டமாஸ்கஸ் நகரம் கைப்பற்றப்பட்டதும், இனி அசாத்தின் மூச்சுப்படாத விடுவிக்கப்பட்ட நகரம் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

குடும்பத்துடன் தப்பியுள்ள அசாத், தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அசாத்தின் வீழ்ச்சியை நாடு மொத்தம் ஒன்று திரண்டு கொண்டாடி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.