Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம்
கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
Google Map மூலம் பயணம்
இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் கூகுள் மேப் உதவியால் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்போது, கூகுள் மேப் தவறான பாதையை காண்பித்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். வனப்பகுதியில் மொபைல் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள், இரவு முழுவதும் அச்சத்தால் அங்கேயே தங்கியுள்ளனர். பின்னர், அடுத்த நாள் காலையில் விடிந்ததும் மொபைல் நெட்வொர்க் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளனர். பின்னர், பொலிஸார் உதவியுடன் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், “இந்த சம்பவம் பரேலி – பிலிபித் நெடுஞ்சாலையில் நடந்தது. அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளனர். காரில் குழந்தைகள் உள்பட சுமார் 7 பேர் இருந்தனர்” என்றார்.