அச்சம் கொள்ளத் தேவையில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு
நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
மேலும் சில வீடுகளில் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்ற செய்திகள் வௌியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.