ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா!
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 09.00 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுநிலை அதிபர் த.கலைச்செல்வனிடம் கற்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் நடைபெறவுள்ளது.
1994 ஆம் ஆண்டு முதல் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய த.கலைச்செல்வன் 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராகப் பொறுப்பேற்று, கல்லூரியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒருவராக மிளிர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். .
இவர், ஆசிரியராக, பகுதித் தலைவராக, அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே நற்பண்பண்புகளை வளர்ப்பதிலும், கல்லூரியின் நற்பெயரைக் கட்டிக்காப்திலும் அரும் பங்காற்றியவர். குறிப்பாக கல்லூரி கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் முன்னிலை வகித்தமைக்கு இவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.