தப்பிச் சென்ற ஜனாதிபதி! மாஸ்கோவின் சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றம்
ரஷ்யாவில் உள்ள சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பஷார் அல்-அசாத்
கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலைத் தொடர்ந்து சிரிய ராணுவம் பின்வாங்கியது.
அதன் பின்னர் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் விமானம் மூலம் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார்.
மேலும், ரஷ்ய படைகள் சிரியாவில் இருந்து வெளியேற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
எதிர்க்கட்சி கொடி
இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள சிரிய தூதரகத்தில் ஒரு குழு எதிர்க்கட்சி கொடியை ஏற்றியுள்ளது.
அப்போது “இன்று தூதரகம் திறக்கப்பட்டு ஒரு புதிய கொடியின் கீழ் சாதாரணமாக செயல்படுகிறது” என தூதரக பிரதிநிதி ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
அசாத் நாட்டைவிட்டு வெளியேறிய சில மணிநேரங்களுப் பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் மாஸ்கோவில் இருப்பதாக கிரெம்ளின் ஆதாரம், ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது.