வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர்
வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பின்னரும் தனது ஜீப்பில் உள்ள 15 பயணிகளை காப்பாற்றியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வயிற்றில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்
இந்திய மாநிலமான பீகார், போஜ்பூர் மாவட்டம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங். இவர் அப்பகுதியில் வாடகை ஜீப் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று தனது ஜீப்பில் 15 பயணிகளை ஜாவூன் கிராமத்திலிருந்து ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.
அவர்கள் திடீரென சந்தோஷ் சிங்கை துப்பாக்கியால் சுட்டனர். அதில், அவரது வயிற்றில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவருக்கு காயம் ஏற்பட்டபோதும் வண்டியை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்துக்கு வந்து நிறுத்தினார்.
இதனிடையே, அவரை துபபாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் தப்பித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சந்தோஷ் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது, சந்தோஷ் சிங் நலமுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.