கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு சிறப்பிதழாக அமைந்த கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று 10.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் செல்வஅம்பிகை நந்தகுமரனும் கௌரவ விருந்தினராக கல்விக் காருண்யன் ஈஎஸ்பி நாகரத்தினம், கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ. கருணலிங்கம், கலாசாலை சிவன் ஆலயப் பிரதம குரு சிவசிறி பா. செல்வசேனக்குருக்கள், டாக்டர் க. ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலாசாலையின் பிரதி அதிபர் த. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரையையும் மலராசிரியர் கு. பாலஷண்முகன் வெளியீட்டுரையையும் விரிவுரையாளர் சி. மனோகரன் நன்றியுரையையும் ஆற்றினர். நிகழ்வின் ஆரம்பத்தில் சிவன் ஆலயத்தில்; விசேட பூசை இடம்பெற்று கல்வியங்காடு சுதா ரஜீவன் குழுவினரின் மங்கல இசையுடன் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது. விசேட கல்வி நெறி ஆசிரிய மாணவி முகமட் அன்சார் அஸ்மிலா பேகம் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.