;
Athirady Tamil News

பொறுப்புக் கூறல் ஊடாக எதிர்கால மனித உரிமை மீறல்களை தடுக்க ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது-அப்துல் அஸீஸ்

0
video link-

 

மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதையும் பொறுப்புள்ள தரப்பினரை பொறுப்புக் கூறவைப்பதன் மூலம் எதிர்கால மீறல்களை தடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது

மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் உயிர் வாழும் காலம் வரைக்கும் அவனுக்கான உரிமை கூடவே இருக்கிறது. மனித உரிமைகள் பிரிக்க முடியாதவை என்பதால் இலங்கை அரசியல் அமைப்பு மூலம் அடிப்படை உரிமையில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதால் மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதையும் பொறுப்புள்ள தரப்பினரை பொறுப்புக் கூறவைப்பதன் மூலம் எதிர்கால மீறல்களை தடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைக் தினத்தை சிறப்பிக்குமுகமாக இன்று(10) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலம் அங்கு கருத்துத் தெரிவித்த அவர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கை மூலம் ஏற்படும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நடாத்தப்பட்ட பின்னர் நடப்பு ஆண்டில் ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட குறிப்பிடப்பட்ட சில பரிந்துரைகள் பற்றியும் ஆணைக்குழுவினால் அரசாங்க நிருவாக சுற்றிக்கை 22/88 இன் அடிப்படையில் அங்கவீனமுற்றோர்களுக்கு தொழில் வழங்குதல் பற்றிய வழிகாட்டல்கள் பற்றியும் கருத்துத் தெரிவித்ததுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்ததற்கமைய பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் உரிமை மீறப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்கும் நோக்காகக் கொண்டுள்ளது என்பதையும் பொறுப்புள்ள தரப்பினரை பொறுப்புக் கூற வைப்பதன் மூலம் மனித உரிமைகளை மதிக்கும் சமூகத்தை வளர்ப்பதன் மூலமும் எதிர்கால உரிமை உரிமை மீறல்களை தடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர்.கலாநிதி. எம்.எம். பாசில் கலந்து கொண்டார்.

அத்துடன் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் அறிக்கைகள் பிரதம அதிதி பிரதேச செயலாளர் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.