சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சிறீபவானந்தராஜா எம் . பி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா நேற்றைய தினம்(10) விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன் போது, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் G. ரஜீவ்வை சந்தித்து வைத்தியசாலை தொடர்பாக கலந்துரையாடியதுடன் சத்திரசிகிச்சை பிரிவு மற்றும் இரத்த வங்கி போன்றனவற்றின் தொழிற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் வினைத்திறனாக்குவது தொடர்பிலும், நடமாடும் சேவைகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது .
இவ் கலந்துரையாடலில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டதுடன் மேலும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அங்கு கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தேவைகளுக்கும் அத்தியாவசிய விடயங்களுக்கும் கிளிநொச்சி சுகாதார திணைக்களத்தின் பங்களிப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.