கலாசாலையில் ஆங்கில கவிதை நூல் வெளியிடப்பட்டது
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்களால் எழுதப்பட்ட மலரும் மொட்டுகள் (Blooming Buds) என்ற ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று 11.12.2024 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி ஆங்கில பாட விரிவுரையாளரும் கலாசாலையில் இடம்பெற்றுவரும் கல்விமாணி கற்கை நெறி இணைப்பாளருமாகிய மா. பிரபாகரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார் . நூலின் முதற் பிரதியை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். நிகழ்வுகளை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர் சி. மயூரன் முன்னிலைப்படுத்தினார். ஆசிரிய மாணவி ஓரிமா ஜெல்சியா நன்றியுரை ஆற்றினார்.
கலாசாலையின் ஆங்கில பாட விரிவுரையாளர் அருள்லிங்கம் சுஜீவாவின் நெறிப்படுத்தலில் ஆசிரிய மாணவர்கள் ஆக்கிய கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வின் நிறைவில் ஆசிரிய மாணவர்கள் தாம் எழுதிய கவிதைகளை ஆற்றுகை செய்தனர்.