;
Athirady Tamil News

மில்லியன் இந்தியர்கள் வாழ்க்கையுடன் விளையாடும் டொனால்டு ட்ரம்ப்… அரசியலமைப்பை திருத்த முடிவு

0

அமெரிக்காவில் பிறப்புரிமை-குடியுரிமை என்பது அபத்தமானது என நம்பும் டொனால்டு ட்ரம்ப், அதை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க எல்லைக்குள்

இதனால், சுமார் 1.6 மில்லியன் இந்தியர்கள் பாதிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதத்தை டொனால்டு ட்ரம்ப் கேள்விக்குறியாக்கியுள்ளார்.

பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது. இந்த திட்டத்தையே டொனால்டு ட்ரம்ப் முடிவுக்கு கொண்டுவர இருக்கிறார்.

உலகின் முதன்மையான பல நாடுகளில் இவ்வாறான திட்டம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், அந்த திட்டமானது தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறதாகவும், அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறப்புரிமை குடியுரிமை என்பது அரசியலமைப்பின் 14 வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதாகும், அமெரிக்க சட்டத்தின் கீழ் இது நிறுவப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை எளிதாக நீக்கிவிட முடியாது என்றும், மீக்கும் முடிவு குறிப்பிடத்தக்க சட்ட சவால்களை எதிர்கொள்வது உறுதி என்றும் கூறுகின்றனர்.

1.6 மில்லியன் இந்தியர்கள்

2022ல் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் சுமார் 4.8 மில்லியன் இந்திய-அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். அதில் 34 சதவிகிதம் அல்லது 1.6 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.

தற்போதைய விதிகளின் அடிப்படையில் இவர்கள் அமெரிக்க குடிமக்கள். இந்த விதி நீக்கப்பட்டால், இந்த 1.6 மில்லியன் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகும்.

அமெரிக்க ஜனாதிபதியால் அரசியலமைப்பை திருத்த முடியாது. ஆனால் சிறப்பு ஆணை வெளியிடலாம். ஆப்படியான ஒரு ஆணை பிறப்பித்தால் அது 14வது திருத்தத்தை மீறுவதாக அமையும் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.