;
Athirady Tamil News

தென் கொரிய முன்னாள் அமைச்சர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயற்சி!

0

தென் கொரியாவின்(South Korea) முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், கிம் யோங் ஹியூன்(Kim Yong Hyun) கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம், குடியரசுத் தலைவர் யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டின் கீழ் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் போது நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூன், நடைமுறைப்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டி, சியோல் நீதிமன்றம் பிடி ஆணையை பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.

கைதான முதல் நபர்
அதன்படி, டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ ஆட்சி சட்டத்தை கொண்டு வந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட முதல் நபர் இவராவார்.

இதற்கிடையில், தென் கொரிய காவல்துறையினர் குடியரசுத் தலைவர் யூனின்(Yoon’s) அலுவலகத்தை சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு காவல்துறை இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இராணுவ ஆட்சி சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.